மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சற்று முன் வருகிறான் சோழன் என்ற டைட்டிலில் பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#manirathnam #ponniyinselvan
Leave a comment