தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு – 1/2 கப்
வெல்லம் – 1 கப்
தேங்காய்ப்பூ – 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு – 5
பால் – 1 கப்
ஏலகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு – 1 மேசைக்கரண்டி
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
பின் வறுத்த கடலைப் பருப்பை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
பின் பருப்பு ஆறியதும் அதனுடன் தேங்காய்ப் பூ, முந்திரிப்பருப்பை சேர்த்து தண்ணீர் சிறிதளவு தெளித்து மாவாக அல்லது விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் ஒரு குவளை தண்ணீரை கொதிக்க வைத்து வெல்லத்தை கரைத்து வடிகட்டுங்கள்.
இந்த வெல்லக் கரைசலை திரும்பவும் அடுப்பில் வைத்து அரைத்த கடலைப்பருப்பு விழுதையும் இதனுடன் சேர்த்து வேகும் வரை கொதிக்கவிடுங்கள்.
ப।ின் அதில் காய்ச்சிய சூடான பாலை சேர்த்து ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப் பருப்பு போன்றவற்றையும் போட்டு கலக்குங்கள்.
இறுதியாக நறுக்கிய தேங்காயை மேலே தூவி பரிமாறுங்கள்.
இப்போது கடலைப்பருப்பு பாயாசம் தயார்.
சூடாக பரிமாறுவது சுவையை இரட்டிப்பாக்கும்.
Leave a comment