இளம் ஹீரோக்களுக்கே சவால்விடும் பார்த்திபன்! -வைரலாகும் வீடியோ

1741852 cover

இரவின் நிழல் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கு தயாராகி வருகிறார் இயக்குனரும் நடிகருமான பார்த்திபன்.

பார்த்திபன் இயக்கி நடித்து அண்மையில் வெளியான ‘இரவின் நிழல்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில், பார்த்திபன், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர், சகாய பிரகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை ‘இரவின் நிழல்’ திரைப்படம் பெற்றுள்ளது.

இந்த திரைப்படம், தமிழக முதல்வர் மற்றும் திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரின் வாழ்த்துக்களையும் பெற்றுள்ளமை அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளார்.

இதற்காக போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள பார்த்திபன், இது தொடர்பான வீடியோவை தனது ருவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோவில், “ஆடி ஆடி ஆடி ஆடி கூழ் ஊற்றி, Cool-ஆய் ஆடி ஆடி நாடி நரம்பெல்லாம் எனர்ஜி நல்லா கூடி கூடி கூடி ரெடி ஆகிறான் ப்ளடி அடுத்தப் படத்திற்கு. எப்டி?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

#cinema

 

Exit mobile version