21 6
சினிமாபொழுதுபோக்கு

பல கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது.. பார்த்திபன் ஓபன் டாக்

Share

பல கோடி சம்பளம் வாங்கும் ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது.. பார்த்திபன் ஓபன் டாக்

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் விஜய்.

இவர் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தால் இவரது பட சாதனைகளும், பாக்ஸ் ஆபிஸிம், அவரது சம்பளம் என எல்லாம் உயர்ந்துகொண்டே தான் வரும். ஆனால் அவரோ நான் சம்பாதித்தது போதும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியலில் களமிறங்கியுள்ளார்.

தனது 69வது படத்துடன் இனி நடிக்கப்போவதில்லை என்றும் முடிவு எடுத்துவிட்டார். அவரது அடுத்த டார்க்கெட் 2026ம் ஆண்டின் தேர்தல் தான்.

தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபனிடம் கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு அவர், நான் அனைத்தையும் நேர்மறையாக பார்ப்பேன், நண்பர் விஜய் இப்போது அரசியல் வரவேண்டும் என்ற அவசியமே இல்லை.

பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார், அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான். இப்படியொரு இடத்தை விட்டுவிட்டு அவர் எதற்கு அரசியல் வர வேண்டும், அப்படியென்றால் அவர் ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.

அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் சப்போர்ட் பண்ணிவிடலாம். மாறுதல் ஒன்றே மாறாதது. விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...