‘கே.ஜி.எஃப் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு பான் இந்தியன் ஹீரோவாக மாறிய நடிகர் யாஷ் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் பிரம்மாண்டத் திரைப்படமான ‘டாக்ஸிக்’ (Toxic) படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் ஆகியோர் நடித்து வருகிறார்கள். கே.ஜி.எப் படத்திற்கு இசையமைத்த ரவி பசூர் தான் இப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் ஹீரோ யாஷ்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ள யாஷ், 2026ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி டாக்சிக் படம் வெளியாகும். மேலும் படம் வெளிவர இன்னும் 100 நாட்கள் உள்ளன என போஸ்டருடன் பதிவு செய்துள்ளார். இதோ அந்த அறிவிப்பு.
