‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’, ‘பைசன்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய முன்னணி இயக்குநரான மாரி செல்வராஜ், தான் ஏன் நடிகராக விரும்பவில்லை என்பது குறித்துப் பகிர்ந்துள்ள கருத்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், நடிகராக அறிமுகமாகப் போவதில்லை என்று மாரி செல்வராஜ் உறுதியளித்துள்ளார்.
“கண்டிப்பாக நான் நடிகன் ஆக மாட்டேன். அதற்கு முக்கிய காரணம், நான் நடிகர் ஆகிவிட்டால் என் பின் வருவதற்கு ஒரு கூட்டம் உருவாகி விடும்.
நடித்தால் எளிதாகக் கடவுள் ஆகி விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. நான் கடவுள் ஆகவும் விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ்ஜின் இந்தக் கருத்து, திரையுலகில் நடிகர்களைப் பின்பற்றும் ரசிகர் கூட்டத்தையும், அவர்களுக்குக் கிடைக்கும் ‘கடவுள்’ அந்தஸ்தையும் சுட்டிக்காட்டி சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.