விஜய் மாறவே இல்லை – அப்படியே இருக்கிறார்

1779625 1

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. மேலும், ‘வாரிசு’ திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் அப்டேட் தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் மனோபாலா, விஜய் குறித்து பகிர்ந்துள்ள பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில், “வாரிசு படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை சந்தித்தேன். அவர் அப்படியே இருக்கிறார். நடனம் ஆடும் போது அதிக உத்வேகம். அவருடனான சந்திப்பு புத்துணர்ச்சியையும் உத்வேகத்தையும் எனக்கு கொடுத்தது” என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

#cinema

Exit mobile version