முகப்பருக்கள் முகத்தின் அழகையே அழித்து விடும்.
முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.
இதனை முடிந்தவரை இயற்கைமுறையில் நீக்குவதே சிறந்தது. தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.
- தினமும் சிறு சிறு தக்காளி துண்டுகளைக் கொண்டு சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால் முகப்பருக்களும், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.
- கிராம்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து பின்னர் குளிர வைக்க வேண்டும். குளிர வைத்த கிராம்பை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர பருக்கள் குணமடையும்.
- வாழைப்பழத்தின் தோலை அரைத்து அதனுடன் குறைந்தளவு தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து பின்னர் கழுவினால் முகப்பரு மற்றும் கரும்புகளில் இருந்து விடுபடலாம்.
- பருக்கள் உள்ள இடங்களில் தேனை தடவி சிறிது நேரம் ஊற வைத்த பிறகு பால் கொண்டு கழுவி, குளிர்ந்த நீரில் கழுவினால் பருக்களை போக்கலாம்.
- கடலை மாவு, சந்தனப் பொடி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால் பருக்கள் நீங்கும்.
- ஆவிப்பிடித்தால் முகத்துவாரங்கள் திறந்து, அதிலுள்ள அழுக்குகள், இறந்த செல்கள் தளர்ந்துவிடும். இதன் மூலமாக மாசு நிறைந்த இறந்த செல்கள் முழுவதுமாக வெளியேறி பருக்களை குணப்படுத்தலாம்.
#Lifestyle
Leave a comment