‘நன்றி தங்கமே’ -ரொமான்ஸை அள்ளிக்கொட்டும் நயன் – விக்கி ஜோடி

nayan vignesh birthday1

இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக அவதாரம் கொண்டு தமிழ் திரையுலகில் வலம்வருபவர் விக்னேஷ் சிவன்.

நேற்றைய தினம் தனது 35 ஆவது பிறந்தநாளை நடிகையும், காதலியுமான நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த நிலையில் ’நீ என் வாழ்க்கையில் இருப்பதற்கும், உன்னுடைய இந்த சப்ரைஸுக்கும் நன்றி தங்கமே’ என்று குறிப்பிட்டு  புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இவருக்கு சமூக வலைத்தளத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை முன்னிட்டு காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் வெளியிடப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையில் Two Two Two என துவங்கும் இந்த பாடலில் அனிருத் நடனமாடி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

Exit mobile version