தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியான நயன் – விக்கி ஜோடி விடுமுறையை கழிக்க தற்போது பார்சிலோனா பறந்துள்ளது.
ஸ்பெயின் சென்ற ஜோடி விமானத்தில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகின. இந்த நிலையில் தற்போது பார்சிலோனாவின் நயன் – விக்கி எடுத்துக்கொண்ட புரைப்படங்களும் வைரலாகியுள்ளன.
பல ஆண்டுகளாக காதலித்து வந்த நயன் – விக்கி ஜோடி ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜூன் 9ஆம் திகதி திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் முடிந்தவுடன் திருப்பதி உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்ற இந்த ஜோடி அலையை தரிசனங்களைமுடித்துவிட்டு தாய்லாந்துக்கு தேனிலவு சென்றனர்.
தேனிலவு முடிந்து நாடு நிரும்பிய இவர்கள் மீண்டும் தமது வேலையில் கவனம்செலுத்த தொடங்கினர். நயன்தாரா, ஷாருக்கானின் ’ஜவான்’ திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். அதேநேரம் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பில் பிஸியாக இருந்தார்.
இந்த நிலையில் தற்போது நயன் – விக்கி தம்பதிகள் ஒரு சிறிய பிரேக் எடுத்துள்ளனர். விடுமுறையை கொண்டாட ஸ்பெயின் சென்றுள்ளனர்.

#Cinema