25 6846d907331d9
செய்திகள்பொழுதுபோக்கு

நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர்: 2ஆவது முறையாக வென்றது ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி

Share

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டியில் ரொனால்டோ(Cristiano Ronaldo) தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.

ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் மார்ட்டின் ஜூபி மெண்டி முதல் கோலை அடித்தார்.

போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார்.

45ஆவது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2ஆவது கோலை அடித்தார்.

இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 61ஆவது நிமிடத்தில் போர்ச்சுகல் அணித்தலைவர் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார். சர்வதேச அளவில் அவரது 138ஆவது கோலாகும்.

இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் நடைப்பெற்றது.

இதில் 5 வாய்ப்புகளிலும் போர்ச்சுக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது.

இதனால் போர்ச்சுக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2ஆவது முறையாக இந்த பட்டத்தை வென்றது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...