கமலில் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தான் மோசமான பிசிஓஎஸ் என்ற ஹார்மோன் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், எனது உடல்நிலை தற்போது சரியாக இல்லை. பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் ஆகியவற்றால் மோசமான ஹார்மோன் பிரச்சனைகளை நான் எதிர்கொள்கிறேன். இதனால், சீரற்ற மாதவிடாய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்பதை பெண்கள் அறிவார்கள்.
எனவே, இது போன்ற கடினமான சூழ்நிலைகளை கையாளுவதற்கு ஆரோக்கிய உணவு மற்றும் நல்ல தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுகிறேன். இதனை நான் ஒரு போரட்டமாக பார்க்காமல், என் உடல் அதன் சிறந்ததைச் செய்யும் ஒரு இயல்பான இயக்கமாக அதை ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த ஒரு சவாலான பயணம் .அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
இந்தப்பதிவு தற்போது சமூகவலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
#shrutihaasan #hormonaldisorder #pcos #Cinema