19 1529670475
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

சருமப் பிரச்சினையை தீர்க்க கஸ்தூரி மஞ்சள்!

Share

இயற்கை அன்னை அளித்த வரப்பிரசாதங்களில் ஒன்று கஸ்தூரி மஞ்சள். கஸ்தூரி மஞ்சளை நேரடியாக முகத்தில் தடவினால் எரிச்சல் உண்டாக தொடங்கும்.

முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள், முக அழற்சி போன்ற அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு அற்புத சக்தி வாய்ந்த பொருள் இந்த கஸ்தூரி எனலாம்.

இந்த கஸ்தூரி மஞ்சள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் செயல்பட்டு நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடிய சக்தியாக பணிபுரிகிறது.

சூரிய ஒளியினால் ஒரு சிலருக்கு முகம் இயற்கை பொலிவினை இழந்து கருத்து காணப்படும். இப்படி கருமையான சருமத்தை கொண்டவர்கள் கஸ்தூரி மஞ்சளை பூசி வர நாளடைவில் உங்களுடைய இயற்கை நிறம் மீண்டு வெள்ளையாக மாறி விடுவீர்கள்.

கஸ்தூரி மஞ்சளை நேரடியாக பயன்படுத்தக்கூடாது, கஸ்தூரி மஞ்சள் பொடியாக அரைக்க நீங்கள் எப்பொழுதும் மஞ்சள் கிழங்கை வாங்கி காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வது தான் நல்லது.

கஸ்தூரி மஞ்சள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு தகுந்தபடி பயத்தம் மாவை சேர்க்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் பயத்தம் மாவு சேர்த்து குழைத்து முகத்திற்கு பேக் போல போட்டு நன்கு உலர விட்டு விடுங்கள். பத்து நிமிடம் கழித்து முகத்தை நன்கு அலசினால் ரொம்பவே பளிச்சென மிருதுவான சருமம் நமக்கு கிடைக்கும்.

எல்லா விதமான சரும பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய இந்த அற்புதமான குறிப்பை வாரம் ஒருமுறை நீங்கள் பயன்படுத்தி வரலாம். முகப் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதால் எளிதாக அதிலிருந்து விடுபட முடியும்.

மேலும் கருத்த தேகம் உடையவர்கள் வெள்ளையாக மாற தினமும் குளிக்கும் பொழுது கஸ்தூரி மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தலாம். அலர்ஜி எதிர்ப்பு தன்மை அதிகம் நிறைந்துள்ள இந்த கஸ்தூரி மஞ்சளுடன் பால் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...