devi sri prasad turns hero in yellamma
பொழுதுபோக்குசினிமா

இசையமைப்பாளர் டூ ஹீரோ: எல்லம்மா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார் தேவி ஸ்ரீ பிரசாத்!

Share

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), முதல்முறையாகத் திரையில் நாயகனாக அவதாரமெடுக்கிறார்.

இவர் தமிழில் சிங்கம், மன்மதன் அம்பு, வெடி, சாமி ஸ்கொயர், சச்சின், வில்லு, வீரம், கங்குவா என ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசையில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
அப்படத்தின் வெற்றிக்கு இவரது பாடல்களும் முக்கிய காரணம். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் ‘குபேரா’ படத்தில் தனுஷ் பாடியுள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் வேணு யெல்டாண்டி இயக்கத்தில் உருவாகும் ‘எல்லம்மா’ எனும் புதிய திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நாயகனாக அறிமுகமாகின்றார்.

வேணு யெல்டாண்டி ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். ‘எல்லம்மா’ திரைப்படத்தின் கிளிம்ஸ் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் இப்படம் உருவாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

Share
தொடர்புடையது
Gf0V72bkAArSBx
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்: 2,200 பக்க PhD ஆய்வறிக்கை வசனத்தால் சமூக வலைத்தளங்களில் கிளம்பிய ‘மீம்’ திருவிழா!

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே...

image 750x 697a036a9d829
சினிமாபொழுதுபோக்கு

கல்கி 2898 AD பார்ட் 2: தீபிகா படுகோனுக்குப் பதில் ‘சுமதி’யாக சாய் பல்லவி? தீயாய் பரவும் தகவல்!

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த மெகா ஹிட் திரைப்படமான ‘கல்கி 2898 AD’...

hq720 2
சினிமாபொழுதுபோக்கு

திரிஷாவுடன் சிவகார்த்திகேயன்: ஹீரோவாவதற்கு முன் நடித்த பழைய விளம்பர வீடியோ இணையத்தில் வைரல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், திரைத்துறைக்கு வருவதற்கு முன் நடிகை திரிஷாவுடன்...

G v7vRXasAE7PZf
பொழுதுபோக்குசினிமா

தனுஷ் இயக்கத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் மகன் யாத்ரா: வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் புதிய மெகா ப்ராஜெக்ட்!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனும், முன்னணி நடிகர்...