l
சினிமாபொழுதுபோக்கு

சினிமா தயாரிப்பாளர் கொலை! திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Share

சென்னையில் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை மதுரவாயல் என்ற பகுதியை அடுத்த சின்மயா நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது சடலம் அந்த பகுதியில் பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு சாலையில் வீசப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை செய்த போது கொலை செய்யப்பட்ட பாஸ்கரன் லக்ஷ்மி கரண் எண்டர்பிரைசஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ராம்கி நடித்த ‘சாம்ராட்’ மற்றும் ’ஒயிட்’ ஆகிய படங்களை தயாரித்து உள்ளார் என்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று காரில் வீட்டில் இருந்து சென்ற நிலையில் அவர் திரும்பி வரவில்லை என்று அவரது மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

அப்போது சாலையோரம் பிளாஸ்டிக் பையில் வீசப்பட்ட பிணத்தை கண்டு பிடித்ததை அடுத்து அவரது மகன் தனது தந்தையின் உடல் தான் என்பதை உறுதி செய்தார்.

இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலை செய்த குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலீசார் இறங்கியுள்ளனர்.

இச்சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

#Cinema

Capture 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...