தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் கொடி கட்டிப் பறந்தவர் மைக் மோகன். ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த காலத்திலும் பாடல்கள் மூலம் பிரபலமடைந்தவர். இற்றைவரை அவரது திரைப்படப்பாடல்கள் பெரிதும் ரசிகர்களை ஈர்த்துள்ளன.
1980- 90-களில் தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு இடம் இருந்தது. அதன்பின் நீண்ட காலமாக படங்களில் நடிக்காமல் இருந்தார். தற்போது அவர் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார்.
தாதா 87 மற்றும் பவுடர் போன்ற படத்தை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்திற்கு சில்வர் ஜுப்ளி ஸ்டார் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
#CinemaNews
Leave a comment