1791993 mah2
சினிமாபொழுதுபோக்கு

மகேஷ்பாபுவின் தந்தை காலமானார்!

Share

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா நேற்று திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு சுயநினைவு திரும்பியது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் உள்ளார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அத்துடன் செயற்கை சுவாச கருவிகள் மூலம் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Cinima

Share

1 Comment

தொடர்புடையது
14 15
சினிமா

சூரி கூட நடிக்க OKவா-னு கேக்குறாங்க.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஓப்பன் டாக்

சூரி நடிப்பில் பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாமன். இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா...

15 16
சினிமா

44 வயதை எட்டிய நடிகை சன்னி லியோன்.. அவருடைய சொத்து மதிப்பு

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். இவர் 2012ம் ஆண்டு வெளிவந்த...

12 16
சினிமா

விஜய், அஜித்துக்கு நோ சொன்ன நடிகை சாய் பல்லவி.. காரணம்

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே...

13 15
சினிமா

ராஷ்மிகாவின் அடுத்த படம் இவருடனா.. ரொமான்ஸ் வேற லெவலில் இருக்குமே

நடிகை ராஷ்மிகா தான் தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயின். அவர் நடிக்கும் படங்கள்...