Maggi Noodles Omelet
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

மேகி நூடுல்ஸ் ஆம்லெட்

Share

தேவையான பொருட்கள்

மேகி பாக்கெட் – 1

முட்டை – 2
கரட் துருவல் – 2 டீஸ்பூன்

குடைமிளகாய் – 1

தக்காளி – 1 (சிறியது)

ப.மிளகாய் – 3

வெங்காயம் – 1 (சிறியது)

உப்பு, எண்ணெய் – சிறிதளவு

மஞ்சள் – 1 சிட்டிகை

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை

வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும். தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.

பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக்கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f826ae523888053ebb5ed50ee1d53e8269218cef31578
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் முன்னோட்டத்திற்குத் திரையரங்குகளில் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) நாளை...

750x450 643120 parasakthi movie
பொழுதுபோக்குசினிமா

சூர்யாவின் ‘பராசக்தி’ படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: 10-ஆம் திகதி வெளியாவது உறுதி!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கச்...

suresh4 1767331292
பொழுதுபோக்குசினிமா

சல்லியர்கள் படத்திற்குத் திரையரங்குகள் மறுப்பு: நேரடியாக ஓடிடியில் வெளியீடு – சுரேஷ் காமாட்சி காட்டம்!

இயக்குனர் கிட்டு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால்,...

articles2FqpILCUr6EEqQv1X62MFX
சினிமாபொழுதுபோக்கு

டிமான்ட்டி காலனி 3 ஆரம்பம்: மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திகில் திரைப்படமான ‘டிமான்ட்டி...