kamal 55 1
பொழுதுபோக்குசினிமா

உலக நாயகன் பெயரையோ, புகைப்படத்தையோ வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி!

Share

நடிகர் கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது சினிமா வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், ‘உலக நாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது பிரபலமான வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது.

தனது அனுமதியின்றித் தனது தனிப்பட்ட அடையாளங்களை (Personality Rights) வணிக லாபத்திற்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி நடிகர் கமல்ஹாசன் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்குத் தாக்கல் செய்தார்.

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. கமல்ஹாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதிட்டார்.

நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு ‘நீயே விடை’ நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனமும் கமலின் பெயர், புகைப்படம், வசனங்கள் மற்றும் பட்டங்களை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.

இந்தத் தடை உத்தரவு குறித்துத் தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடக் கமல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதே சமயம், கார்ட்டூன்களில் (Cartoons) நடிகர் கமலின் படங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை ஏதுமில்லை என்பதை நீதிபதி தெளிவுபடுத்தினார்.

இந்த மனு குறித்துப் பதிலளிக்குமாறு ‘நீயே விடை’ நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையைப் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்தார். ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனும் தனது ‘ஆளுமை உரிமையை’ (Personality Rights) நிலைநாட்ட நீதிமன்றத்தை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...