ரசிகர்களுக்கு சூப்பரான லியோ அப்டேட் கொடுத்த லோகேஷ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிரூத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நிறைவடைந்துவிட்டன. வரும் அக்டோபரில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘லியோ’ படத்தின் முதல் பாடலான `நா ரெடி’ பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்மையில் வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இப்பாடலில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகள் உள்ளதால், இப்பாடலுக்கு எதிராகப் பல சர்ச்சைகளும் கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அத்தோடு இப்படத்தின் படப்பிடிப்பும் அண்மையில் தான் நிறைவடைந்தது.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் லியோ படம் குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதாவது லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாக லேட் ஆகும் என்றும் லியோ படம் கைதி மாதிரியான படம் என்றும் கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.