லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
விஜய் – லோகேஷ் கனகராஜ் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், ‘லியோ’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது.
காஷ்மீர் படப்பிடிப்பு குறித்து தொழில்நுட்ப பணியாளர்கள் தங்களது கருத்துகளை பகிரும் அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலானது.
ஜோஜு ஜார்ஜ் இந்நிலையில் லியோ திரைப்படத்தில் இணைந்துள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இப்படத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிக்கவிருக்கும் பகுதியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.#cinema
Leave a comment