நடிகர் யாஷ் நடிப்பில் புத்தாண்டை முன்னிட்டு வெளியான ‘KGF-2’ படம் உலகம் முழுதும் வசூல் மழை பொழிந்து வரும் நிலையில், பாலிவூட்டில் மேலும் ஒரு சாதனை புரிந்துள்ளது.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப். 1’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப். 2’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 13-ம் திகதி, உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ‘கே.ஜி.எஃப். 2’ படம் வெளியானது.
இந்தப் படத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீணா தாண்டன், மாளவிகா அவினாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக், அர்ச்சனா ஜோயிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிய இந்த படம் , விஷுவல், சண்டைக் காட்சிகள், வசனங்கள், இசை என அனைத்திலும் மிரட்டலாக இருந்தது.
இந்தியா முழுவதும் வசூல் மழை பொழிந்துவருகிறது கேஜி எப்-2. முதன்முதலாக தென்னிந்தியாவை சேர்ந்த கன்னட மொழிப் படம் ஒன்று, அனைத்து மொழி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று வசூல்ரீதியாகவும், விமர்சனரீதியாகவும் சாதனை புரிந்து வருகிறது.
படம் வெளியான 4 நாட்களில் 500 கோடி ரூபாக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும், இந்தியில் 52 கோடி ரூபா வரை ‘கே.ஜி.எஃப். 2’ வசூலித்துள்ளது.
அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படங்களுக்குப் பிறகு, வட இந்தியாவில் அதிகளவு ரசிகர்களை ‘கே.ஜி.எஃப். 2’ தன்வசப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#cinema
Leave a comment