நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘வாஷி’ என்ற மலையாளத் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘வாஷி’ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலின் சில வரிகளை பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் பாடலை கேட்ட ரசிகர்கள் கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அருமையாக பாடுவார் என்று எங்களுக்கு தெரியாது என்று ஒரு தொழில்முறை பாடகி போல் மிக சிறப்பாக பாடியுள்ளார் என்றும், என்ன ஒரு அருமையான வாய்ஸ் என்று பல ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#KeerthiSuresh #Cinema
Leave a comment