Untitled 1 67 scaled
சினிமாபொழுதுபோக்கு

அரசியலில் குதிக்கும் கீர்த்தி சுரேஷ்

Share

தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் கீர்த்தி சுரேஷ் இதனை அடுத்து சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் இவருக்க சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

இதைத்தொடர்ந்து ரெமோ, பைரவா, தொடரி, சர்க்கார் என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக உயர்ந்தார் மேலும் மகாநதி என்ற படத்தில் நடிகை சாவித்திரியாகவே வாழ்ந்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கீர்த்தி சுரேஷ் தன் உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறி வருகின்றார். மேலும் குறைவான படங்களில் மட்டுமே கீர்த்தி சுரேஷ் நடித்து வருகின்றார்.இதன் காரணமாக அவர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் எனவும் வதந்திகள் பரவின.

ஆனால் இதனை கீர்த்தி சுரேஷின் தரப்பு முற்றிலும் மறுத்துள்ளது. இந்நிலையில் இதுபோல தற்போது ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. அதாவது கீர்த்தி சுரேஷ் விரைவில் அரசியலில் களமிறங்க இருக்கிறாராம். மேலும் இவர் திமுக கட்சியில் இணையப்போகின்றார் என்றும் பேசப்பட்டு வருகின்றது.

தற்போது மாமன்னன் படத்தில் உதயநிதியுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக வதந்திகள் பரவின. இதுபோல தான் சில வருடங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் ஆந்திராவில் தன் அரசியல் பயணத்தை துவங்க இருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் அது வெறும் வதந்தியாகவே முடிந்துவிட்டது.

அதுபோல தற்போதும் கீர்த்தி சுரேஷ் அரசியலில் களமிறங்கவுள்ளார் என பேசப்பட்டு வருகின்றது. எனவே இந்த தகவல் உண்மையா இல்லை வதந்தியா என்பதை கீர்த்தி சுரேஷ் தான் கூறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
சினிமாபொழுதுபோக்கு

ரசிகரின் செயலால் கடுப்பான அஜித்.. முகமே மாறிவிட்டது!! இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித் தற்போது கார் ரேஸில் முழுமையாக கவனம் செலுத்தி...

12 11
சினிமாபொழுதுபோக்கு

Dude படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?

லவ் டுடே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே ரூ. 100...

5 14
சினிமாபொழுதுபோக்கு

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவின் 9வது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. விஜய் சேதுபதி...

4 14
சினிமாபொழுதுபோக்கு

நீங்க வாட்டர் மெலனா இல்லை முந்திரி கொட்டையா.. பாராட்டுவது போல கலாய்த்த விஜய் சேதுபதி

சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பல போட்டியாளர்கள் விளாசி தள்ளிவிட்டார். குறிப்பாக ஆதிரை, பார்வதி மற்றும்...