1796234 ke3
சினிமாபொழுதுபோக்கு

பூர்வீக வீட்டில் கீர்த்தி!

Share

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளவர் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உதயநிதியுடன் மாமன்னன், ஜெயம் ரவி ஜோடியாக சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஒரே நாளில் பிறந்த தனது பெற்றோர்கள் பிறந்த நாள் விழாவை கொண்டாடினார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் வெளிநாடுகளுக்கு செல்வது. உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு போவது போன்ற பழக்கங்களை கடைபிடித்து வருகிறார்.

1796236 ke

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் உள்ள தனது மூதாதையரின் பூர்வீக வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார் கீர்த்தி சுரேஷ்

பழமை வாய்ந்த அந்த வீட்டின் முன்னால் நின்றும், வீட்டுக்குள் சென்று தரையில் உட்கார்ந்தும், அங்குள்ள உறவினர்களை சந்தித்ததும் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அங்கிருந்த 8-ம் நூற்றாண்டை சேர்ந்த மிகவும் பழமை வாய்ந்த திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கும் சென்று சுற்றி பார்த்து சாமியை வழிபட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

dailythanthi 2026 02 14 7466cod3 6
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் D55: 35 கோடி சம்பளத்தை மறுத்த மம்மூட்டி! – ‘கதைக்காக’ எடுத்த அதிரடி முடிவு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் இயக்குநரான தனுஷ், தற்போது தனது 55-வது திரைப்படத்தை இயக்கி...