சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் ருவிட்ரில் இட்ட பதவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருடந்தோறும் ஒக்டோபர் 11 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
நடிகைகளான ஸ்ருதிஹாசன் மற்றும் நடிகை அக்ஷரா ஹாசன் எனும் இரு பெண்களின் தகப்பனாக உலகநாயகன் கமல்ஹாசன் ருவிட்டரில்
பதிவொன்றை இட்டிருந்தார்.
அந்தப் பதிவில்,
‘ஆணுக்குத் தனி, பெண்ணுக்குத் தனி என்றே இங்கு உலகு சமைக்கப்படுகிறது. இல்லத்தில் தொடங்கி இணையம் வரைக்கும் இப்பாகுபாடு நீடிக்கிறது. இந்நிலை மாற வேண்டும். சமவாய்ப்பு ஓங்க வேண்டும். சர்வதேசப் பெண் குழந்தைகள் தினத்தில் ஒரு அப்பாவின் மன்றாடல் இது’ என கமல் பதிவிட்டுள்ளார்.
இப் பதிவு இப்போது வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி இரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment