விக்னேஷ்சிவன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வருகிறது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’.
படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதேவேளை, படத்தின் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படக்குழுவினர் தற்போது, ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளனர்.
படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகஉள்ளது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
#Cinema