நடிகர் விஜய் அரசியலில் நுழைந்த பிறகு வெளியாகும் அவரது கடைசித் திரைப்படம் என்பதால் ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வரும் ஜனவரி 9-ஆம் திகதி பொங்கல் வெளியீடாக வரவுள்ள இப்படத்தின் டிக்கெட் விற்பனையில் தற்போது முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன.
கோவில்பட்டியில் உள்ள சத்தியபாமா, சண்முகா, லட்சுமி ஆகிய திரையரங்குகளில் ஒரு டிக்கெட் ரூ.1000 (இலங்கை மதிப்பில் சுமார் 3,500 ரூபா) வரை விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர் 600, 800, 1000 என வெவ்வேறு கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினர் கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.