இந்த எண்ணெய்யால் சருமத்திற்கு இவ்வளவு நன்மையா?

பெண்கள் செயற்கையான பொருட்களை பயன்படுத்தி சரும அழகை தக்கவைப்பதை விட இயற்கையான பொருட்களினால் ஏற்படும் அழகை அதிகம் விரும்புகிறார்கள்.

வீட்டில் உள்ள பல பொருட்கள் பெண்களின் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளின், எண்ணெய்த் தன்மைகள், பருக்களை நீக்ககூடிய தன்மை கொண்டனவாக  காணப்படுகின்றன.

domenicogelermo171000329

 

அந்த வரிசையில் புதினா ஒரு சிறந்த மருத்துவ குணமிக்கதாகும். புதினா உணவுக்கு மட்டுமன்றி அதில் எண்ணெய் செய்து சருமத்திற்கு பயன்படுத்தலாம். கடைகளில் இந்த புதினா எண்ணெய் கிடைக்கிறது.  அவற்றால் ஏறப்டும் சரும நன்மைகளை பார்க்கலாம்.

புதினா எண்ணெய் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு ஆகும். மேலும் இது இயற்கையாகவே சருமத்தை சுத்தப்படுத்துகிறது.

 

 

புதினா எண்ணெயின் பாக்டீரியா எதிர்ப்பு குணங்கள் சருமத்தில் முகப்பருவை உண்டாக்கும் கிருமிகளைக் குறைக்க உதவும். இது பருக்களைப் போக்கவும்.

எரிந்த சருமத்தை ஆற்றவும் உதவும். புதினா அத்தியாவசிய எண்ணெய் சில நேரங்களில் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

நீர்த்த புதினா எண்ணெயை (கேரியர் எண்ணெயுடன்) தோலில் தடவலாம் அல்லது நீராவி அல்லது டிஃப்பியூசர் மூலம் உள்ளிழுக்கலாம்.

 

புதினா எண்ணெயின் மற்ற நன்மைகள் கிருமிகளைக் கொல்வது, அரிப்பை நிறுத்துவது, வலியைக் குறைப்பது, வாந்தியைத் தடுப்பது அல்லது குறைப்பது, சளியை அகற்றுவதற்கு உடலுக்கு உதவுதல்,

தசைப்பிடிப்புகளைக் குறைத்தல், வாயுவைக் குறைத்தல் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.

 

 

#LifeStyle

Exit mobile version