ilaiyaraja biography 6600e25694568
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவின் அடுத்தடுத்த நிபந்தனைகள்.. விழிபிதுங்கும் தனுஷ்

Share

இளையராஜாவின் அடுத்தடுத்த நிபந்தனைகள்.. விழிபிதுங்கும் தனுஷ்

இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்பட அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும் ’இளையராஜா’ என்ற டைட்டில் வைக்கப்பட்ட பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது என்பதும் தெரிந்தது. இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தை கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்க போகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரனாக இருந்தாலும் தன்னிடம் அனைத்து விஷயங்களையும் கேட்டு அனுமதி பெற்று தான் படமாக்க வேண்டும் என்று இளையராஜா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் தன்னுடைய சகோதரர் பாவலர் வரதராஜன் மற்றும் தன்னுடைய நண்பர்கள் பாரதிராஜா, கமல்ஹாசன், ரஜினிகாந்த், வைரமுத்து ஆகியவர்களின் கேரக்டர்களில் நடிக்கும் நட்சத்திரங்களை தேர்வு செய்யும் போது அச்சு அசல் அவர்களைப் போலவே இருக்க வேண்டும் என்றும் அல்லது அவர்களையே நடிக்க வைக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

மேலும் தனக்கு பிடிக்காத காட்சி இருந்தால் கண்டிப்பாக அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் டார்ச்சர் செய்து வருவதாக கூறப்படுவதால் இந்த படத்தை ஏன் தான் ஒப்புக்கொண்டோம் என்று அருண் மாதேஸ்வரன் விழிபிதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் தனுஷ் இடமும் அவ்வப்போது தன்னுடைய கேரக்டரின் நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்று அவர் கூறி வருவதும் தனுஷூக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் இரண்டு முறை தேசிய விருது பெற்ற தனக்கு எந்த கேரக்டரை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாதா என்றும் தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறி வருவதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்த படம் முடிவதற்குள் தனுஷ் மற்றும் அருண் மாதேஸ்வரன் ஒரு வழி ஆகி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...