tamilni 115 scaled
சினிமாபொழுதுபோக்கு

Bigg Boss Title Winner மாயாவுக்கு கிடைக்கலாம்.. அர்ச்சனா வேஸ்ட்டா? ஷாக் கொடுத்த விசித்ரா

Share

பிக் பாஸ் சீசன் 7ல் ஐம்பது வயதைக் கடந்த நடிகையாக காணப்படும் விசித்ரா, வெற்றிகரமாக 95 நாட்களைக் கடந்த பின்னே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விசித்ராவுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்பட்டது. அவர் இறுதி வரை சென்று டைட்டில் வின் பண்ணுவதற்குரிய வாய்ப்பு இருப்பதாகவே ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இறுதியாக வெளியேறினார் விசித்ரா.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதன்படி அவர் கூறுகையில்,

எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்குமே நன்றி. நான் இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருப்பேன்னு நினைச்சு கூட பாக்கல. இதுவே எனது வெற்றி அப்படி என்று தான் நான் நினைக்கிறேன். இதை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

நான் வெளியே வந்ததற்கு அப்புறம் நிறைய பேர் என்னை பிக் பாஸ் வெளியே அனுப்பியது unfair என்று எல்லாம் சொன்னீங்க. அந்த அளவுக்கு நான் மக்கள் மத்தியில் இருக்கேன் என்று நினைக்கும் போது அதுவே எனக்கு போதுமானது தான்.

எனினும், நான் வெளியே வந்ததற்கு பிறகு எல்லாருமே கேட்ட ஒரு கேள்வி யார் டைட்டன் வின் பண்ணுவாங்க? அப்படி என்று தான். எல்லாருமே சொல்றது அர்ச்சனா என்று தான். என்ன பொறுத்த வரைக்கும் மாயா வின் பண்ணினா நல்லா இருக்கும் என்று தோணுது. இது எனது தனிப்பட்ட கருத்து இல்ல. பிக் பாஸ் வீட்டில் இருந்த காரணத்தின் அடிப்படையில்தான் இதைச் சொல்றேன்.

பிக் பாஸ் வீட்டுல மாயா, வெளில கெட்ட பெயர் வாங்கினாலும் பரவால்ல, மக்களை சந்தோஷப்படுத்தினா போதும் என்று தான் கேம் விளையாடினாங்க. அர்ச்சனா உள்ள வரும்போது, நல்லா ஒர்க் பண்ணிட்டு தான் பிக் பாஸ் உள்ள வந்து இருக்காங்க. மேலும், பிரதீப் விஷயத்தில் உரிமை குரல் எழுப்பினதால அர்ச்சனாக்கு நிறைய சப்போர்ட் கிடைச்சது.

பிரதீப் விஷயத்துல நான் கூட சொன்னது, அவன்ன உள்ள வச்சு திருத்தி இருக்கலாம் என்றுதான். ஒருவேளை பிரதீப் இப்போ பிக் பாஸ் வீட்டுல இருந்து இருந்தா டைட்டில் வின்னருக்கான போட்டியில் பெரிய மாற்றம் இருந்திருக்கும்.

அதன்படி இந்த சீசன்ல டைட்டில் வின்னர் ஆவதற்குரிய வாய்ப்பு அர்ச்சனா மற்றும் மாயாவுக்கு தான் இருக்குது. மாயாவ எடுத்துக்கொண்டா மாயா நெகட்டிவா காட்டி பிக் பாஸ் ஷோவ நல்லபடியா கொண்டு போறாங்க.

அர்ச்சனாவ எடுத்துக் கொண்டா, வெளில இருந்து பிக் பாஸ் வீட்டுக்கு வரும் போதே நல்லா ரெடியாகி வந்திருக்காங்க. அதுக்கு ஏற்றமாதிரி கேம் விளையாடுறாங்க.

எது எவ்வாறு எனினும், நான் சொன்னாலும் சொல்லல என்றாலும் இதுல ஒருத்தர் தான் வின்னர், ரன்னர் ஆக வர போறாங்க என்று சொல்லியுள்ளார் விசித்திரா.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...