download 6 1 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

வியர்க்குருவில் பாதுகாப்பு பெறுவது எப்படி!

Share

வியர்க்குருவில் பாதுகாப்பு பெறுவது எப்படி!

கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் பிரச்னை இது. அதிலும், உடலில் பித்தம் அதிகம் இருப்பவர்கள், உடல்பருமன், கொழுப்புச்சத்து அதிகம் உள்ளவர்கள், இயற்கையாகவே உடற்சூடு உள்ளவர்களுக்கு இது உண்டாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

இறுக்கமான ஆடைகளை அணிவது போன்ற நடைமுறைப் பழக்கங்களாலும் இது ஏற்படலாம். இயற்கை முறையில் தீர்வுகள் * நுங்கு, கோடை காலத்தில் மட்டுமே கிடைக்கும்.

இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வியர்க்குரு நீங்கும். * வியர்க்குருவுக்கு சந்தனம் மிகச்சிறந்த நிவாரணி.

ஒரிஜினல் சந்தனத்தை உடல் முழுவதும் பூசிக் குளிக்கலாம். வியர்க்குருவைப் போக்க சந்தனத்துடன் மஞ்சள் சேரத்துத் தடவலாம்.

மஞ்சள், கிருமி நாசினி என்பதால், வியர்க்குருவை மட்டுப்படுத்தும்;

கிருமித்தொற்றால் ஏற்படும் அரிப்பு போன்ற பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.

* வெள்ளரிக்காய், கிர்ணி, இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றைப் பருகலாம். இவை உடலின் நீரிழப்பைச் சரிசெய்யும். வியர்க்குருவைப் போக்க உதவும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர், திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை சுடுதண்ணீரில் கலந்து பருகலாம் அல்லது நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதேபோல வெட்டி வேர் பவுடரையும் பயன்படுத்தலாம்.

* அருகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது ‘அறுகன் தைலம்’, ‘தூர்வாரி தைலம்’ என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

* மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

* பாசிப்பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும். * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

* சீரகம், சுக்கு, ஏலம், நெல்லிக்காய் ஆகியவற்றை சம அளவில் எடுத்துப் பொடி செய்து, அதற்கு இணையாக சர்க்கரையைப் பொடி சேர்த்து கலந்துகொள்ளவும். தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை டீஸ்பூன் அளவுக்கு இதைச் சாப்பிட்டுவந்தால், உடல் சூட்டால் ஏற்படும் நோய்களையும் வியர்க்குருவையும் தடுக்கலாம்.

* உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, கூட்டு, குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை தவிர்க்க வேண்டும்.

* நேரம் தவறித் தூங்கக் கூடாது. சூடான தரையில் படுத்து உறங்கக் கூடாது. காற்றோட்டமான இடங்களில் படுத்து உறங்க வேண்டும்.

* குப்பைமேனிக் கீரையை பருப்பில் சேர்த்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்; வியர்க்குரு நெருங்காது.

#Helthy

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...

sandhya
சினிமாபொழுதுபோக்கு

10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிப்புக்குத் திரும்பிய காதல் சந்தியா!

‘காதல்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி நட்சத்திரமாக ஜொலித்த நடிகை சந்தியா, திருமணத்திற்குப் பிறகு...

dinamani 2025 11 24 e5dgap5m Capture
சினிமாபொழுதுபோக்கு

அஜித்தின் ‘ஏகே 64’ படத்தில் ரெஜினா: மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணைவு!

நடிகர் அஜித்குமாரின் 64-வது படமான (AK 64) குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. வெற்றிப் படமான...