மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தனக்கு வரப்போகும் வருங்கால கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
ஜான்வி தன் முதல் படமான தடக்கின் ஹீரோ இஷான் கட்டாரை காதலித்து இருப்பினும் அந்த காதல் முறிந்துவிட்டது. அதன் பிறகு நடிகை சாரா அலி கானின் நண்பரை ஜான்வி காதலிப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தனக்கு வரப் போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்று ஜான்வி தெரிவித்துள்ளார்.
ஜான்வி கபூர் கூறியதாவது, எனக்கு கணவராக வருபவர் மிகவும் திறமையானவராக இருக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் விரும்பி செய்ய வேண்டும்.
அவரை நினைத்து நான் சந்தோஷப்பட வேண்டும். அவரிடம் இருந்து ஏதாவது கற்க வேண்டும்.
இதை எல்லாம் விட அவருக்கு நகைச்சுவை உணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். என்னை அதிகமாக நேசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#cinema
Leave a comment