1847147 ponn2
சினிமாபொழுதுபோக்கு

திரிஷா குந்தவை ஆனது எப்படி? வீடியோ வெளியிட்ட படக்குழு

Share

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக தயாராகி முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதால் பொன்னியின் செல்வன் 2 ரிலீசை அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்க முடிவு செய்து இருப்பதாக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதனை படக்குழுவினர் மறுத்து திட்டமிட்டபடி ஏப்ரல் 28-ந்தேதி தேதி வெளியாவது உறுதி என்று தெரிவித்தனர்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரிஷாவின் தோற்றம் வடிவமைக்கப்பட்ட வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “கூர்மையான நாக்கு. திடமான மனம். பவர்ஹவுஸ்! எங்கள் நித்திய அழகை நீங்கள் காண ஆவலுடன் காத்திருக்கிறீர்களா? படத்திற்கு பின்னால் திரிஷா குந்தவையாக மாறியது எப்படி என்பதைப் பாருங்கள். விரைவில் முதல் சிங்கிள் வெளியாகும். காத்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளனர்.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
screenshot13541 down 1713541699
சினிமாபொழுதுபோக்கு

கடந்த வருடம் வெளியாகி பெரிய ஹிட் ஆன மலையாள படம் மஞ்சுமெல் பாய்ஸ்.

இந்த படம் கேரளாவை தாண்டி தமிழில் தான் பெரிய ஹிட் ஆனது. அதற்கு காரணம் படம்...

images 7
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ முதல் தனுஷின் ‘D55’ வரை: பூஜா ஹெக்டேவின் அடுத்தடுத்த தமிழ்ப் படங்கள்!

நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ்த் திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். தளபதி விஜய்யின்...

images 5
சினிமாபொழுதுபோக்கு

மணிரத்னம் படத்தில் நடிக்கக் கையை வெட்டவும் தயார்: நடிகை பிரியாமணி உருக்கமான கருத்து! 

பிரபல நடிகை பிரியாமணி, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதற்காகத் தனது...

4a0863b31f2176412487ed4e6877a71517618271634881270 original
சினிமாபொழுதுபோக்கு

சியான் 63: விக்ரமின் அடுத்த படத்தை அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்குகிறார்!

எப்போதும் சவாலான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் விக்ரமின் (சியான்) அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ...