உயர் சிகிச்சை! – வெளிநாடு செல்லும் சமந்தா

samantha ruth prabhu 1638673850918 1638673862425

பிரபல நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் அடுத்ததாக உயர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் நடிகை சமந்தா உயர் சிகிச்சைக்காக தென்கொரியா செல்ல இருப்பதாகவும் அங்கு அவர் சில மாதங்கள் தங்கி சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.

தென்கொரியாவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பிய பின்னர் அவர் விஜய் தேவரகொண்டா உடன் நடிக்கும் ’குஷி’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமாகி மீண்டும் உற்சாகமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

#cinema

Exit mobile version