money plant1
ஜோதிடம்பொழுதுபோக்கு

வீட்டில் பண மழை பொழிய மணி பிளான்ட் செடியை இவ்வாறு வையுங்கள்

Share

வீட்டில் அல்லது அலுவலகத்தில் அதிஷ்டம் செழித்து பண மழை பொழிய வேண்டுமா? மணி பிளான்ட் செடியை இப்படி வையுங்கள்.

மணிபிளான்ட் உங்களுடைய வீட்டில் பணமழை பொழிய வேண்டும் என்றால், அதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றிய ஒரு சிறிய தாந்திரீக பரிகாரம் உங்களுக்காக

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால், வீட்டில் நிச்சயமாக வறுமை, பண கஷ்டம் நீங்கி, கடன் சுமை குறைந்து, வருமானம் அதிகரிக்கும்.

வீட்டிற்கு வெளியே அழகிற்காக மணிபிளான்ட் கொடியை வளர வைப்பார்கள். அது வெளியில் இருக்கட்டும். ஆனால் வீட்டிற்கு உள்ளே வரவேற்பறையில் ஒரு சிறிய கண்ணாடி குடுவையில் நல்ல தண்ணீரை ஊற்றி அதில் மணி பிளான்ட் செடியை வளர வைப்பது வீட்டிற்கு வாஸ்து விற்கும் மிக மிக நல்லது.

வீட்டிற்கு உள்ளே தொட்டியில் மணிபிளான்ட் செடியை வைத்தாலும் தவறு கிடையாது. ஏதோ வாஸ்து செடி என்று சொல்கிறார்கள். மணி பிளாண்ட் செடியை வீட்டில் வைத்தோமா, வளர்த்தோமா என்று இருக்கக்கூடாது.

ஆசைஆசையாக ஆர்வத்தோடு மணி பிளான்ட் செடியை வைத்து, தினமும் தண்ணீர் ஊற்றும் போது அந்த செடியுடன் இரண்டு நிமிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். உங்களுக்கு தேவையான பணத்தை கூட அந்த செடியிடம் கேட்கலாம். தாராளமாகக் கொடுக்கும் அன்போடு பேசுங்கள்.

இதேபோல கண்ணாடி குடுவையில் மணி பிளான்ட் செடியை போட்டு வைத்திருந்தால் அந்த கண்ணாடி குடுவைக்குள் இருக்கக்கூடிய தண்ணீரில் இரண்டு வெட்டிவேரை போட்டு விடுங்கள். வெட்டி வேர் நமக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கக்கூடியது. மணி பிளான்ட் உடன் வெட்டிவேர் வாசம் சேரும்போது அதிர்ஷ்டம் நமக்கு இரட்டிப்பாக கிடைக்கும்.

கொஞ்சமாக தண்ணீரில் இரண்டு துண்டு வெட்டிவேரை போட்டு நன்றாக ஊறவைத்து விடுங்கள். ஊறிய வெட்டிவேர் வாசம் நிறைந்த இந்த தண்ணீரில், வெட்டி வேரை எடுத்து விட்டு, அந்த தண்ணீரை மட்டும் மணிபிளான்ட் செடிக்கு தொட்டியில் மண்ணில் ஊற்றுவது மிகவும் நல்லது.

நேர்மறை ஆற்றலை தரக்கூடிய வெட்டிவேர் வாசமும் மணிபிளான்ட் செடியில் இருக்கக்கூடிய வாஸ்துவும் ஒன்றாக இணையும் போது நமக்கு இரட்டிப்பு பலனை கொடுக்கும். நம்பிக்கையோடு மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி பார்த்தால் நிச்சயமாக உங்களுக்கு ஏதாவது ஒரு ஜாக்பாட் அடிப்பது உறுதி. ட்ரை பண்ணி பாருங்க.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...