‘பிக்பாஸ் சீசன் 5’ நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளன.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினை அவருக்குப் பதில் வரும் வாரங்களில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, ரம்யா கிருஷ்ணன் சில வாரங்கள் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதோடு, சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ‘பிக்பாஸ் ஜோடிகள்’ நிகழ்ச்சிக்கும் நடுவராக இருந்திருக்கிறார்.
ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கிய அனுபவம் இருப்பதால், கமல்ஹாசன் வரும் வரை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.
#CinemaNews
Leave a comment