விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. இன்னும் ஒரு சில வாரங்களில் டைட்டில் வின்னர் யார் என தெரிந்துவிடும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மக்களின் எதிர்பார்ப்போடு தொடங்கி தற்போது 89 நாட்களைக் கடந்துள்ளது பிக்பாஸ் சீசன் 7.
இதன் ஆரம்பத்தில், 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். குறித்த படத்தில் சின்னதாக ரோலில் நடித்திருந்தாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்வசம் ஈர்த்துள்ளார் மாயா.
இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலுள்ள மாயா அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், மக்களை மகிழ்விப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார்.
பிக் பாஸ் சீசன் 7 இன்னும் ஒரு சில நாட்களில் டைட்டில் வின்னர் யாரென அறிவதற்கு ரசிகர்கள் பெரும் ஆர்வமாக உள்ளனர்.
இந்த நிலையில், பிக் பாஸ் மாயா வெற்றி பெற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ‘VoteforMaya’ மாயா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
அதன்படி, மொழிகளை கடந்து பிக் பாஸ் மாயா டைட்டில் வின் பண்ண வேண்டும் என குறித்த ஹேஷ்டேக் பதிவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- Big boss ultimate
- bigg boss
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil live
- bigg boss 7 tamil promo
- bigg boss 7 tamil vijay tv
- bigg boss season 4
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 tamil audition
- bigg boss season 7 tamil contestants
- bigg boss season 7 tamil promo
- bigg boss season 7 tamil update
- bigg boss tamil
- bigg boss tamil 4
- bigg boss tamil 6
- bigg boss tamil 7
- biggboss news
- Cinema News
- latest news
- Tamil
- tamil bigg boss
- tamil bigg boss live
- tamil shows
- tamil tv