நயன் வழியில் ஹன்சிகா! – திருமண ஒளிபரப்பு ஓ.டி.டி.யில்

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் ஹன்சிகா ஹன்சிகாவுக்கு திருமணம் முடிவாகி உள்ளது.

விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால், ஜெயம் ரவி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர் ஹன்சிகா.
இவர் தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

1791097 ha

இந்தநிலையில், ஹன்சிகா தனது நீண்ட கால நண்பரும், தொழில் பங்குதாரருமான மும்பையை சேர்ந்த சோஹேல் கதுரியா என்பவரை மணக்கிறார். இவர்கள் திருமணம் அடுத்த மாதம் (டிசம்பர்) 4ம் திகதி ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனையில் நடக்க உள்ளது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹன்சிகாவின் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை பெற பிரபல ஓ.டி.டி. தளம் விலை பேசி வந்தது.

இந்நிலையில் பெரிய தொகைக்கு ஓ.டி.டி.யில் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை ஹன்சிகா விற்றுவிட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இவர்களின் திருமணம் ஒளிபரப்பாகவுள்ளதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.

ஏற்கனவே நயன்தாராவும் தனது திருமண ஒளிபரப்பு உரிமையை ஓ.டி.டி.க்கு விற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Cinema

 

Exit mobile version