வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து,இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க உள்ளார். ரசிகர்களால் ‘தளபதி 67’ என அழைக்கப்படும் இந்த படத்தின் மீது தற்போதே எதிர்பார்ப்பு எகிற தொடங்கியுள்ளது.
கடந்த 2021-ம் ஆண்டு இருவரின் கூட்டணியில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து மீண்டும் அதே கூட்டணி இணைந்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை கூட்டியுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் கவுதம் வாசுதேவ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகயிருக்கும் இந்த படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Cinema
Leave a comment