image 3 2rcm9
பொழுதுபோக்குசினிமா

அமிதாப் பச்சனின் வீட்டில் தங்கக் கழிவறை 10 கோடி ரூபாய் பெறுமதியா? வைரலாகும் புகைப்படங்கள்!

Share

பாலிவுட்டின் ஜாம்பவான் அமிதாப் பச்சனின் மும்பை இல்லமான ‘ஜல்சா’வில் உள்ள தங்கக் கழிவறை (Golden Toilet) குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் நிலவி வரும் “2016-ல் நான் எப்படி இருந்தேன்” (2016 Rewind) என்ற ட்ரெண்டில் இணைந்த நடிகர் விஜய் வர்மா, தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

அதில் அமிதாப் பச்சனின் வீட்டு பாத்ரூமில் இருக்கும் ‘தங்கக் கழிவறையுடன்’ (Golden Toilet) தான் எடுத்த செல்ஃபி ஒன்றைப் பதிவிட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு அமிதாப்புடன் இணைந்து ‘பிங்க்’ (Pink) படத்தில் நடித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்பதும், அது தனது வாழ்வின் மிகமுக்கியமான ஆண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமிதாப் பச்சன் வீட்டில் இருக்கும் இந்தக் கழிவறையின் விலை குறித்துப் பல ஊகங்கள் எழுந்துள்ளன. லண்டனில் சமீபத்தில் ஏலத்திற்கு வந்த ஒரு தங்கக் கழிவறை சுமார் 10 மில்லியன் டாலர் (ரூ. 85 – 100 கோடி) மதிப்பிற்கு ஏலம் போனது.

அமிதாப்பின் வீட்டில் உள்ள இந்தக் கழிவறையும் பல கோடி ரூபாய் மதிப்புடையதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது வெறும் ‘கோல்டன் பினிஷ்’ கொண்டதா அல்லது உண்மையான தங்க முலாம் பூசப்பட்டதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், நெட்டிசன்கள் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

மும்பையின் ஜுஹு பகுதியில் அமைந்துள்ள அமிதாப் பச்சனின் ‘ஜல்சா’ இல்லம் சுமார் ரூ. 100 முதல் 120 கோடி மதிப்புடையது. விலை உயர்ந்த ஓவியங்கள், பழங்கால கலைப்பொருட்கள் நிறைந்த இந்த வீட்டில் இத்தகைய நவீன மற்றும் சொகுசான வசதிகள் இருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

 

Share
தொடர்புடையது
jana nayakan300126
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் வாரியம் கேவியட் மனு தாக்கல்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை (Censor) விவகாரம் தற்போது உச்ச...

26 697ca16239330
பொழுதுபோக்குசினிமா

பூமிக்கு வரும் விண்கல்? ராஜமௌலியின் வாரணாசி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

பிரம்மாண்டத்தின் உச்சமாகத் திகழும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக்கி...

2004158 atlee
பொழுதுபோக்குசினிமா

அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் மெகா ப்ராஜெக்ட்: மீண்டும் இணையும் ‘லக்கி சார்ம்’ தீபிகா படுகோன்!

தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் அட்லீ, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்...

Gf0V72bkAArSBx
பொழுதுபோக்குசினிமா

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்: 2,200 பக்க PhD ஆய்வறிக்கை வசனத்தால் சமூக வலைத்தளங்களில் கிளம்பிய ‘மீம்’ திருவிழா!

இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் மற்றும் க்ரித்தி சனோன் நடிப்பில் வெளியான ‘தேரே...