அடர்ந்த புருவங்களை விரைவில் பெற…!
அடர்த்தியான அழகான புருவங்கள் ஒருவரின் முகத்தை உயர்த்திக் காட்டும். அதனுடன் உங்களை இளமையாகவும் காண்பிக்கும். புருவங்களில் முடி அடர்த்தியாக மாற்ற இதோ சிறந்த வழிமுறைகள்.
வெந்தயம்
வெந்தயத்தை சிறிதளவு எடுத்து இரவு தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் அதை ஒரு பேஸ்ட் போன்று அரைத்து அந்த பேஸ்ட்டை புருவங்களில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து கழுவி வாருங்கள். சிறந்த பலனை உண்டு பண்ணும்.
கற்றாழை
கற்றாழை எல்லோரும் அறிந்த அழகு சாதனப் பொருளாகும். இது எளிதில் கிடைக்கின்றது. சிறிதளவு கற்றாழையை எடுத்து தோலை சீவி ஜெல் எடுத்து புருவங்களில் தடவினால் நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.
விளக்கெண்ணெய்
முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப்படும் மிகவும் பயனுள்ள ஒரு வழிமுறையாகும். விளக்கெண்ணெயை விரல் நுனிகளால் புருவங்களில் தடவி மசாஜ் செய்து வாருங்கள். தினமும் பயன்படுத்தினால் கருமையாக புருவங்களை பெறலாம். புருவத்தின் வேருக்கும் நல்ல ஊட்டச்சத்து கிடைக்கின்றது.
முட்டை
முட்டையில் புரச்சத்து மற்றும் பயோடின் சத்து அதிகம் உள்ளதால் புருவம் வளர மிகவும் உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களில் தடவை 20 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் அடர்த்தியாகும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் லாரிக் அமிலம், ஆன்டி-மைக்ரோபையல் தன்மை கொண்டதால், முடியில் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். வாரத்தின் இருநாள்கள் பயன்படுத்தினாலே நல்ல பிரதிபலன் கிடைக்கும். இரவு தூங்கும்முன் புருவங்களில் தடவிக்கொண்டும் உறங்கலாம்.
Leave a comment