pachai karpooram2
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

10 நிமிடத்தில் பளபளன்னு பளிச்சிடும் சருமத்தைப் பெற பச்சை கற்பூரம்

Share

முகத்தில் கருந்திட்டுக்கள், முகப்பருக்கள், கொப்பளங்கள் உட்பட முகத்தில் இருக்கக்கூடிய சரும பிரச்சனைகளை சரி செய்ய பச்சை கற்பூரம் நன்றாக வேலை செய்யும்.

சாதாரணமாக இறைவனுக்கு ஏற்றக்கூடிய சூடம் அழகு குறிப்புக்கு பயன்படுத்தக் கூடாது. பச்சை கற்பூரம் என்று கடைகளில் தனியாக விற்கின்றது. அதை வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பச்சை கற்பூரத்தை லட்டு செய்யும்போது கூட அதில் கொஞ்சம் மனத்திற்காக சேர்பார்கள்.

அந்த பச்சை கற்பூரம் தான் இந்த அழகு குறிப்பில் பயன்படுத்த வேண்டும். சாதாரண சூடத்தை தவறியும் பயன்படுத்தக்கூடாது.

முதலில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து கையாலேயே நுணுக்கி நன்றாக தூள் செய்து வைத்துக்கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று சிட்டிகை பச்சை கற்பூரத்தை மட்டும் தான் நாம் பயன்படுத்த போகின்றோம். அந்த அளவிற்கு பச்சை கற்பூரம் எடுத்தால் போதும். நிறைய பச்சை கற்பூரத்தை சேர்க்கக்கூடாது.

ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, பச்சை கற்பூரத்தூள் 2 சிட்டிகை, தேன் 1 ஸ்பூன், ரோஸ் வாட்டர் தேவையான அளவு ஊற்றி இதை ஃபேஸ் பேக்காக கலந்து அப்படியே முகத்தில் போட்டுக் கொள்ளலாம். 10 நிமிடங்கள் கழித்து பேக் நன்றாக காய்ந்த பின்பு லேசாக தண்ணீரைத் தொட்டு மசாஜ் செய்து முகத்தை கழுவினால் உடனடியாக முகம் பளிச்சென்று மாறியிருக்கும்.

முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனை ஒரு சில நாட்களில் படிப்படியாக குறையும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை பயன்படுத்துங்கள். முகத்தில் இருக்கக்கூடிய தழும்புகள் முகப்பருக்கள் நன்றாக குறைந்த பின்பு பேக்கை தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம். அதாவது வாரத்தில் இரண்டு நாள் என்ற கணக்கில், ஒரு மாதம் வரை பேக்கை பயன்படுத்திவிட்டு நிறுத்தி விடுங்கள். அதன் பின்பு தேவைப்படும்போது இந்த பேக்கை பயன்படுத்திக் கொள்ளலாம்

பச்சைக் கற்பூரம் சருமத்துக்கு பயன்படுத்தப்பட்டாலும் தொடர்ந்து அதை சருமத்தில் அதிகப்படியாக போடும்போது, ஒரு சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு ரொம்ப ரொம்ப சென்சிடிவ் ஸ்கின்னாக இருந்தால் இரண்டு சிட்டிகைக்கும் குறைவாக, ஒரு சிட்டிகை பச்சை கற்பூர பொடியை குறிப்பில் பயன்படுத்தி பாருங்கள். உங்களுடைய ஸ்கின் சென்சிடிவ் ஸ்கின் எனும் பட்சத்தில் இதை பேட்ச் டெஸ்ட் செய்து விட்டு முகத்தில் அப்ளை செய்வது மிகவும் சிறப்பானது. உங்களுடைய முகத்தில் ஓபன் போஸ் இருந்தால் இந்த குறிப்பை நீங்கள் பயன்படுத்தாதீர்கள்.

உங்களுக்கு ரொம்பவும் ஆயில் ஸ்கின்னாக இருந்தால் கடலை மாவுக்கு பதிலாக முல்தானி மெட்டியை சேர்த்து இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ரோஸ் வாட்டர் உங்கள் வீட்டில் இல்லை என்றால், அரிசி கலைந்த தண்ணீர் அல்லது அரிசி வடித்த கஞ்சியை கொண்டும் இந்த பேக்கை கலந்து கொள்ளலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. தீர்க்க முடியாத சரும பிரச்சனைகளை கூட இந்த ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் தீர்த்து வைக்கும்.

#Beauty

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4952471 3 org Catherine O 27Hara at the 2024 Toronto International Film Festival 1
பொழுதுபோக்குசினிமா

ஹாலிவுட்டில் சோகம்: எம்மி விருது வென்ற மூத்த நடிகை கேத்தரின் ஓ’ஹாரா காலமானார்!

உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகையும், எம்மி (Emmy) விருது வெற்றியாளருமான கேத்தரின் ஓ’ஹாரா (Catherine O’Hara)...

jana nayakan300126
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் பட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சென்சார் வாரியம் கேவியட் மனு தாக்கல்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை (Censor) விவகாரம் தற்போது உச்ச...

26 697ca16239330
பொழுதுபோக்குசினிமா

பூமிக்கு வரும் விண்கல்? ராஜமௌலியின் வாரணாசி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

பிரம்மாண்டத்தின் உச்சமாகத் திகழும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் உருவாக்கி...

2004158 atlee
பொழுதுபோக்குசினிமா

அட்லீ – அல்லு அர்ஜுன் இணையும் மெகா ப்ராஜெக்ட்: மீண்டும் இணையும் ‘லக்கி சார்ம்’ தீபிகா படுகோன்!

தமிழ் மற்றும் இந்தித் திரையுலகில் வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் அட்லீ, தற்போது தெலுங்கு சூப்பர்ஸ்டார்...