அத்துமீறி பெண் போட்டியாளருக்கு கட்டாய முத்தம்.. பிக் பாஸ் சர்ச்சை

23 655c5ef77a4f9

அத்துமீறி பெண் போட்டியாளருக்கு கட்டாய முத்தம்.. பிக் பாஸ் சர்ச்சை

பிக் பாஸ் ஷோ என்றாலே அதில் போட்டியாளராக வரும் பிரபலங்கள் ஒருகட்டத்தில் காதலில் விழுவது வழக்கமான ஒன்று தான் என்றாகிவிட்டது. ஆனால் நிஜ காதலர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தால் என்ன ஆகும் என தற்போது ஹிந்தீயில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 17ம் சீசன் காட்டி இருக்கிறது.

நடிகை இஷா மால்வியா பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்திலேயே போட்டியாளராக வந்த நிலையில், அவரது காதலர் சமர்த் ஜூரெல் இரண்டாவது வாரத்தில் போட்டியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியில் வந்தார்.

இஷா மால்வியா மற்றும் சமர்த் இருவரும் பிக் பாஸ் வீட்டில் எல்லைமீறுவது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இஷா மால்வியாவுக்கு அவரது காதலர் கட்டாயப்படுத்தி முத்தம் கொடுக்கும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த ஷோவை இனி குடும்பத்துடன் பார்க்க முடியுமா என பலரும் கோபமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version