மேற்கிந்திய தீவுகள் அணியை 238 ஓட்டங்களால் தோற்கடித்த இங்கிலாந்து அணி

4 38

எட்ஜ்பஸ்டனில் நேற்று இடம்பெற்ற, முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 238 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

ஹரி புரூக்கின் தலைமையில் விளையாடிய முதல் போட்டியில், இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாடி 8 விக்கெட் இழப்புக்கு 400 ஓட்டங்களை பெற்றது.

எனினும் மேற்கிந்திய தீவுகள் அணி வெறும் 162 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தது.

இதன் மூலம், இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற அடிப்படையில், இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது.

இங்கிலாந்து அணியின் சார்பில் பெத்தெல் 82 ஓட்டங்களையும், டக்கெட் 60 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

Exit mobile version