தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து!

1779591 var

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. இத் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வாரிசு படத்தின் முதல் பாடல் குறித்த புதிய தகவலை இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமன் வாரிசு படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் குறித்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

#cinema

Exit mobile version