இந்த வருட தீபாவளிக்குச் சிறப்பு வெளியீடாக மூன்று தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளன: பிரதீப் ரங்கநாதனின் ‘Dude’, துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ (Bison) மற்றும் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ (Diesel).
இந்த மூன்று படங்களில், முதல் நாள் காட்சிகளிலும் டிக்கெட் விற்பனையிலும் ‘Dude’ திரைப்படத்திற்கே அதிக வரவேற்பு கிடைத்து, அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் ஒதுக்கப்பட்டன.
அடுத்து, ‘பைசன்’ படத்திற்கு ‘Dude’ படத்துடன் ஒப்பிடுகையில் பாதியை விடக் குறைவான அளவிலேயே ‘புக்மைஷோ’ தளத்தில் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. ‘டீசல்’ படத்திற்கு மிகச் சொற்பமான அளவிலேயே டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
இந்தக் குறைந்த டிக்கெட் விற்பனை குறித்த புள்ளி விவரங்களுக்கு, ‘டீசல்’ திரைப்படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமி காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
“எமக்கு ஒதுக்கப்பட்டவை 100 + திரையரங்குகள் மட்டுமே.. அதில் பல காலாவதியான திரையரங்குகள் அடங்கும்,” என அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார்.