ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் திடீரென இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளங்களில் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இருவரும் ரகசியமாக சந்தித்து இருப்பதாக இணையதளத்தில் ஒரு வதந்தி பரவி வருகிறது.
ஆரியபுரம் என்ற பகுதியில் உள்ள பிளாட்டில் தான் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா சந்தித்து வருவதாகவும் இந்த சந்திப்பின்போது குழந்தைகளின் எதிர்காலத்தை பண்ணிட்டு இருவரும் மீண்டும் சேருவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இந்த சந்திப்பு குறித்து இரு தரப்பிலிருந்தும் எந்தவித அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Cinema
Leave a comment