பிரபலங்களின் இணையேற்பு நிகழ்வுகள் எவ்வளவுக்கு எவ்வளவு பிரமாண்டமாக நடைபெறுகிறதோ அதே அளவுக்கு அவர்களது பிரிவுகள் அதாவது விவாகாரத்துகள் அமைதியாக நடந்தேறி விடுகின்றன.
அண்மைக்காலமாக எதிர்பாராத விதமாக குறிப்பிட்ட சில பிரபலங்கள் தமது விவாகரத்துகளை அறிவித்து வருகின்றனர்.
இயக்குனர் விஜய் – அமலாபால் தம்பதியினர் மற்றும் நாகசைத்தனியா – சமந்தா தம்பதியினர் ஆகியோர் அவர்களில் குறிப்பிட்டு சொல்லத்தகுந்த சிலர். இந்த வரிசையில் தற்போது தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இணைந்துள்ளமை ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா உலகின் முன்னணி நட்சத்திரமாக வளம் வந்துகொண்டிருக்கும் நடிகர் தனுஷ் ஹிந்தி ஆங்கிலம் உள்ளிட்ட சினிமா உலகிலும் அவ்வப்போது தலைகாட்டிக்கொண்டிருக்கிறார். துள்ளுவதோ இளமை என்கின்ற திரைப்படத்தின் வாயிலாக திரையில் அறிமுகமாகிய நடிகர் தனுஷ், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், திருடா திருடி என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை வழங்கி அனைவரது கவனத்தையும் பெற்றவர்.
தமிழ் சினிமா எப்போதுமே இரட்டை கதாயாக ஒப்பீட்டுக்கு பெயர் போனது. அதற்கமைய சிவாஜி – எம்ஜிஆர், ரஜனி – கமல், அஜித் – விஜய் வரிசையில் நடிகர் சிம்பு – தனுஷ் ஆகியோர் இடம்பிடித்தாலும், தனுஷின் அயராத உழைப்பு மற்றும் கதை தேர்வு சினிமா உலகில் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில், தனுஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கிடையில், கடந்தம் ஆண்டு திருமணம் நிறைவேறியது.
இவர்கள் இருவரும் நல்ல லக்ஷணங்களுடன் கூடிய தம்பதிகளாக அறியப்பட்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற 15 மற்றும் 11 வலதுகாலை உடைய இரு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த பின்னணியில் தாம் இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் தமது உத்தியோகபூர்வ சமூகவலைத்தளங்களில் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ”18 ஆண்டுகளாக நண்பர்கள், தம்பதி, பெற்றோர், நலம் விரும்பிகளாக இருவரும் இருந்தோம். இந்த பயணம் விட்டுக்கொடுத்தல், புரிதல், ஏற்றுக்கொள்ளல் என வளர்ந்தது.
இன்று இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளோம். ஐஸ்வர்யாவும் நானும் தம்பதிகளாக இருப்பதில் இருந்து பிரிவதாக முடிவு செய்துள்ளோம். எங்களின் முடிவை மதித்து, எங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தலைப்பு தேவையில்லை உங்களது அன்பும் புரிதலும் மிக முக்கியமானது என பதிவிட்டுள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் நடிகர் சிம்பு ஆகியோருக்கு இடையில் திருமணத்துக்கு முன்னர் ஓர் காதல் விவகாரம் கிசுகிசுக்கப்பட்ட அதேவேளை அண்மையில் விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் மற்றும் இயக்குனர் விஜய் ஆகியோக்கிடையிலான மண முறிவுக்கு நடிகர் தனுஷுக்கும் தொடர்புகள் உள்ளதாகவும் உத்தியோகபூர்வமற்ற சில செய்திகள் வெளியிடப்பட்டிருந்தமை இந்த நேரத்தில் நினைவுகூரப்படவேண்டிய விடயம்.
இரு தனி நபர்களுக்கிடையிலான தீர்மானங்கள் குறித்த தலையிட வேறெவருக்கும் அனுமதி இல்லை எனும் அடிப்படையில் அவர்களது தீர்மானம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தட்டும்.
#Cinema