pathan141222 2
சினிமாபொழுதுபோக்கு

உச்சகட்ட கவர்ச்சியில் தீபிகா படுகோன் – படக்குழுவுக்கு உள்துறை அமைச்சர் எச்சரிக்கை!

Share

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் மற்றும் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடித்த திரைப்படம் ‘பதான்’. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’பேஷ்ரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

திரைப்படத்தின் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலில் சர்ச்சிக்குரிய வகையில் அவர் உடை அணிந்து இருந்ததை அடுத்து மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த பாடலில் தீபிகா படுகோனே உச்சபட்ச கிளாமரில் இருந்தார் என்பதும் குறிப்பாக அவர் பிகினியில் இருந்த காட்சிகள் ரசிகர்களை அதிர வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

pathaan shah rukh khan deepika padukones sizzling chemistry in new song besharam rang left fans gasping for air netizens thirsty comments are to watch out for 001

இந்த நிலையில் இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த பாடலில் திருமதி தீபிகா படுகோனின் உடைகள் மிகவும் ஆட்சேபனைக்கு உரியது என்றும், அசுத்தமான மனநிலையில் படமாக்கப்பட்டுள்ளது போல் தெளிவாக தெரிகிறது என்றும், இந்த பாடலில் உள்ள காட்சிகள் மற்றும் உடைகளை சரி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் இந்த படத்தை மத்திய பிரதேசத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கப்படுவது குறித்து பரிசீலனை செய்யப்படும் சூழ்நிலை வரும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சரின் இந்த கருத்து படக்குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘பாய்காட் பதான்’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#Cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15384441 newproject97
பொழுதுபோக்குசினிமா

ஜனநாயகன் படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் இணையும் எச்.வினோத்: இசையமைப்பாளராக சாம் சி.எஸ். உறுதி!

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய எச்.வினோத், தனது அடுத்த...

25 694a3cc6694cc
பொழுதுபோக்குசினிமா

படைத்தலைவன்’ படத்தைத் தொடர்ந்து ‘கொம்புசீவி: கேப்டன் மகனின் அடுத்த அதிரடி!

மறைந்த நடிகர் ‘கேப்டன்’ விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம்...

44528881 6
பொழுதுபோக்குசினிமா

ரிலீஸிற்கு முன்பே சாதனை: ‘ஜனநாயகன்’ படத்தின் வெளிநாட்டு முன்பதிவு 4 கோடியைக் கடந்தது!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமுமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின்...

maxresdefault 1
பொழுதுபோக்குசினிமா

ஜனவரி 10-ல் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது...